Advertisment

'கில்' பண்றதுன்னா விஷால்; 'கிஸ்' பண்ண சிம்பு: வரலட்சுமி சரத்குமார் 'போல்ட்' ஸ்டேட்மென்ட்

நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Varalakshmi Sarathkumar

வரலட்சுமி சரத்குமார்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமியிடம் கில் மற்றும் கிஸ் பண்ணுவது என்றால் யாரை பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிக்க முடியும் என்று தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக தெலுங்கு படங்களில் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். இதனிடையே சர்கார் படம் வெளியாக சமயத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் அந்த விழா மேடையில் தனது அம்மாவுடன் கலந்துகொண்டார். இதில் அவருக்கு பெஸ்ட் வில்லி விருது சர்கார் படத்திற்காக வழங்கப்பட்டது.

இந்த மேடையில் கில் மேரி கிஸ் ஆகிய 3-ம் 3 பேருக்கு கொடுக்க வேண்டும் இதில் விஷால், சிம்பு மற்றும் ஒருவர் யார் யாருக்கு என்ன கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வரலட்சுமி கில் விஷாலுக்கு கொடுக்கலாம். ஏனென்றால் அவருடன் சண்டக்கோழி 2 பண்ணிருக்கேன். மேரி மற்றொருவருக்கும், கிஸ் சிம்புவுக்கும் கொடுக்கலாம் என்று பதில் அளித்துள்ளார். வரலட்சுமியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment