புதிய அவதாரம் எடுக்கும் வரலட்சுமி: முதல் படம் டைட்டில் அறிவிப்பு

நடிகை வரலட்சுமி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை வரலட்சுமி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
varu

புதிய அவதாரம் எடுக்கும் வரலட்சுமி: முதல் படம் டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisment

இப்படத்தில் சிம்பு, விடிவி கணேஷ் உட்பட நலர் நடித்திருந்தனர். தொடர்ந்து, ’தாரை தப்பட்டை’, ‘சர்கார்’, ‘விக்ரம் வேதா’, ‘சத்யா’, ‘சண்டைகோழி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சினிமால் தனக்கான இடத்தை பிடித்தார்.

 ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிகை வரலட்சுமியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். 

இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக இருந்து வருகிறார்.  நடிகை வரலட்சுமி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

Advertisment
Advertisements

இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்த வரலட்சுமி தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது,  நடிகை வரலட்சுமி தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகை வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக நடிகர்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து வருகின்றனர். நடிகர் ரவி மோகன் அண்மையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi Sarathkumar Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: