Advertisment

கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூன்? தாய்லாந்தில் காதலருடன் வரலட்சுமி ஜாலி டூர்

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தாய்லாந்துக்கு காதலர் உடன் ஜாலி சென்றுள்ள வரலட்சுமி வெளிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Varalaxmi with fiance

நடிகை வரலட்சுமியும் அவருடைய காதலரும் வருங்கால கணவருமான நிக்கோலாய் சச்தேவ் இருவரும் தாய்லாந்தில் இருக்கும் புகைப்படங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தாய்லாந்துக்கு காதலர் உடன் ஜாலி சென்றுள்ள வரலட்சுமி வெளிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா என்று கேட்டு வருகிறார்கள்.

Advertisment


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் சரத்குமார். இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. தமிழ் திரையுலகில் நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகி வந்த நிலையில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திய வரலட்சுமி விஜய்யின் சர்க்கார் படத்தில் முத்திரை பதித்தார். நடிகை வரலட்சுமி ஹீரோயின் நடிகைகள் நடிக்கத் தயங்கும் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையால் கலக்கினார். தற்போது 38 வயதாகும் நடிகை வரலட்சுமி அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.  

அண்மையில்தான், நடிகை வரலட்சுமி மற்றும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தச் சூழலில் நடிகை வரலட்சுமியும் காதலர் நிக்கோலாயும் திருமணம் நடப்பதற்கு முன்பே, இருவரும் தாய்லாந்துக்கு ஜாலியாக் டூர் சென்றிருக்கிறார்கள். தாய்லாந்தில் வரலட்சுமியும் நிக்கோலாய் சச்தேவ் இருவரும் எடுத்த்க்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகை வரலட்சுமியும் அவருடைய காதலரும் வருங்கால கணவருமான நிக்கோலாய் சச்தேவ் இருவரும் தாய்லாந்தில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இதே போன்ற மகிழ்ச்சியுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என வாழ்த்திவருகின்றனர். அதே நேரத்தில், சில விஷமத்தனமான நெட்டிசன்கள், திருமணத்துக்கு முன்பே ஹனிமூனா என்று கேட்டு வருகிறார்கள். 

தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment