Advertisment
Presenting Partner
Desktop GIF

வரலட்சுமி திருமணத்தில் மத இணக்கம்: தாய்லாந்து விழா போட்டோஸ் வைரல்

நடிகை வரலட்சுமிக்கும் தொழிலதிபர் நிக்கோலாய்க்கும் தாய்லாந்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது வரலட்சுமி - நிக்கோலாய் திருமண புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
varu nico

வரலட்சுமி - நிக்கோலாய் திருமண புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.  (Photos Source: Instagram)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வரலட்சுமிக்கும் தொழிலதிபர் நிக்கோலாய்க்கும் தாய்லாந்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது வரலட்சுமி - நிக்கோலாய் திருமண புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

publive-image  

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

saru radhi

மாதம் வரலட்சுமி - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தம் இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. 

publive-image

இதைத் தொடர்ந்து, நடிகை வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் ஆடம்பரமாக 5 நாட்கள் நடைபெற்றது. எந்த அளவுக்கு ஆடம்பரமாக நடைபெற்றது என்றால், சென்னை தாஜ் ஹோட்டலில் ஹல்தி, மெஹந்தி ஆகிய திருமண சடங்குகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் எனப பலர் கலந்துகொண்டனர். 

publive-image

இடையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

saru radhi

ஹல்தி, மெஹந்தி சடங்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியே இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என்றால், அடுத்து திருமணம் எப்படி, எங்கே நடைபெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

saru radhi 

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம், நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து, தாய்லாந்தில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

தாயலாந்தில் நடைபெற்ற வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் மத இணக்கத்துடனு நடைபெற்றுள்ளது. நிக்கோலாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், வரலட்சுமி இந்து மதத்தைச் சேர்ந்தவ்ர், இருவரின் மதத்தின் படி திருமணம் மத இணக்கத்துடன் நடந்துள்ளது.

saru radhi

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment