வாழ்த்து மழையில் வரலட்சுமி: தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை இயக்குகிறார்

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். அவருக்கு சினிமா நடிகைகள், நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

actress Varalaxmi sarathkumar debuts as director, இயக்குனராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், actress varalaxmi sarathkumar, varalaxmi sarathkumar directing movie, directing varalaxmi sarathkumar, கண்ணாமூச்சி, varalaxmi sarathkumar indtorduced as director, kannamoochi

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். அவருக்கு சினிமா நடிகைகள், நடிகர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி. தமிழ் சினிமாவில் எந்த பாத்திரம் என்றாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்று நிரூபித்துள்ளார். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தார தப்பட்டை படத்தில் நடித்து கவனம் பெற்றார். பின்னர், விக்ரம் வேதா, சண்டைக் கோழி 2 ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து கலக்கினார்.

வரலட்சுமி சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விலங்குகள் நல பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு குழ்ந்தைகளுக்கான நலன் சார்ந்தும் செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. சான் சிஎஸ் இசையமைக்கிறார்.

இது குறித்து வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரலட்சுமி சினிமா இயக்குனராகியுள்ளதற்கு சினிமா நடிகை லட்சுமி மஞ்சு, நடிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் வரலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress varalaxmi sarathkumar debuts as director

Next Story
இவ்ளோ நெருக்கமா? அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்keerthy suresh close with anirudh, music director anirudh ravichander, கீர்த்தி சுரேஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் அனிருத் நெருக்கமான புகைப்படம், வைரல், actress keerthy suresh, keerthy suresh wishes anirudh, keerthy suresh anirudh photos goes viral, tamil cinema news, tamil viral news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com