நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நடிகர் சிவாஜி உடன் பணிபுரியும்போது ஒருமுறை கோபத்தில் பாதியிலேயே பேக்அப் சொல்லி கிளம்பிவிட்டார்.
மேக்அப் போட லேட் ஆனதால், சிவாஜி சார் ரொம்ப கோவமாக இருக்கிறார் என துணை இயக்குனர் கூற இதனால் அப்செட் ஆன வெண்ணிற ஆடை நிர்மலா அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜியை சந்திக்க முடியாமல் குற்ற உணர்ச்சியால் வெண்ணிற ஆடை நிர்மலா தவித்துள்ளார்.
இதைப் பார்த்த சிவாஜி, எதுவும் நடக்காததுபோல் பெருந்தன்மையுடன் டார்லிங்.. டார்லிங்.. எனக் கூப்பிட்டுள்ளார். அவர் ஓர் சிறந்த நடிகர் நான், ஏன் அப்படி செய்தேன். அவரிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. இந்த குற்ற உணர்வு எனக்கு உண்டு என பேட்டி ஒன்றில் வெண்ணிற ஆடை நிர்மலாவே கூறியுள்ளார்.
சௌராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா கும்பகோணத்தில் பிறந்தவர் ஆவார். இவர் பரதநாட்டிய கலைஞராக விளங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெண்ணிற ஆடை நிர்மலாவை எம்.ஜி.ஆர். தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை தனது வாரிசாகவும் அறிவிக்க விரும்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“