தெய்வ அவதாரம், திடீர் அம்மனாக மாறிய பிக்பாஸ் பிரபலம்; நவராத்திரி கொண்டாட்டமா?

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் திடீர் அம்மனாக மாறியுள்ளார். இது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் திடீர் அம்மனாக மாறியுள்ளார். இது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
vichi

தெய்வ அவதாரம், திடீர் அம்மனாக மாறிய பிக்பாஸ் பிரபலம்; நவராத்திரி கொண்டாட்டமா?

கடந்த 1990 காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. இவர் கவர்ச்சி மட்டுமல்லாமல் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பொதுவாக செந்தில் - கவுண்டமணி படங்களில் நடிகை விசித்ரா இடம்பெற்றிருப்பார்.

Advertisment

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நடிக்க வந்து இந்த வேடம் தான் கிடைத்தது என பல இடங்களில் விசித்ரா குறிப்பிட்டிருக்கிறார். 

நடிகை விசித்ரா ‘போர்க்கொடி’ திரைப்படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து, அவர் ’அவள் ஒரு வசந்தம்’, ‘சின்னத்தாயி’, ‘அமராவதி’, ‘முத்து’, ’சுயம்வரம்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து விலகிய விசித்ரா தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் ‘பிக்பாஸ் சீசன் 7’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

Advertisment
Advertisements

நடிகை விசித்ரா தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த போது பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாகவும் அதனால் தான் சினிமாவை விட்டு விலகினேன் என அதிர்ச்சி செய்தியை தெரிவித்தார். மேலும், தெலுங்கில் அவர் தான் டாப் ஹீரோ என்றும் அப்போது நான் இதை சொல்லி இருந்தால் என் கரியரே காலி ஆகியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இதை பார்த்த பலரும் அந்த நடிகர் பாலையா தான் என இணையத்தில் கிசுகிசுத்தனர். இந்நிலையில், நடிகை விசித்ரா திடீர் அம்மனாக மாறியுள்ளார். அதாவது, நவராத்திரியையொட்டி நடிகை விசித்ரா ஒன்பது தெய்வ அவதாரங்களாக அலங்கரித்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை விசித்ரா. இவை அனைத்தும் ஒரே நாளில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டதுடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மேலும், "9 தெய்வீக தோற்றங்கள். தெய்வீக பெண்மையைக் கொண்டாடும் ஒரு விழா. ஒவ்வொன்றும் அதன் சொந்த முக்கியத்துவம், வலிமை, தைரியம் மற்றும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகின்றன. 

இது நம் அனைவரையும் வழிநடத்தும் மற்றும் உயர்த்தும் ஆற்றலின் நினைவூட்டலாகும். முதல் முறையாக, நான் ஒரே நாளில் 9 தெய்வீக தோற்றங்களாக மாறியுள்ளேன். உண்மையிலேயே இது சிறப்பு வாய்ந்த ஒன்று மற்றும் இதற்கு முன்பு நான் முயற்சிக்காத ஒன்று. இது எனக்குப் பின்னால் இருந்த அற்புதமான குழுவால் மட்டுமே சாத்தியமானது. உங்கள் திறமை, ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி ” என்று பதிவிட்டுள்ளார்.

vichithra Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: