எஸ். எஸ். ஆர்-விஜயகுமாரி திருமணம் செய்து கொண்ட போது விஜயகுமாரிக்கு அண்ணானாக நடிகர் எம்.ஜி.ஆர் இருவருக்கும் விருந்து சீர் வரிசை கொடுத்துள்ளார். குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அதில் எஸ். எஸ். ஆர் என்றழைகக்ப்படும் எஸ். எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
Advertisment
இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் நட்பாக பழகிய போது விஜயகுமாரிக்கு படங்கள் நடிக்க கதை தேர்வு உள்பட பல்வேறு உதவிகளை எஸ். எஸ். ஆர் செய்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தில் சௌகார் ஜானகி நடித்த கதாப்பாத்தித்தில் நடிக்க விஜயகுமாரிக்கு ஆசை இருந்தது. இது தொடர்பாக அவர் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க ராமாபுரம் தோட்டத்திற்கு போன் செய்துள்ளார்.
அப்போது எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அழைப்பை எடுத்துள்ளார். அவரிடமும் இதை பற்றி கூறியுள்ளார். ஜானகியும் இதை எம்.ஜி.ஆரிடம் கூறுவதாக கூறியுள்ளார். விஜயகுமாரிக்கும்- ஜானகிக்கும் நல்ல பழக்கம் உண்டு. ஆனால் அதற்கு முன்னரே சௌகார் ஜானகி இதில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் இவர் இப்படத்தில் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் மீது விஜயகுமாரிக்கு மிகுந்த அன்பு உண்டு. விஜயகுமாரிக்கு எம்.ஜி.ஆரை அண்ணன் என்ற முறையில் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் உடன் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்றாலும் விஜயகுமாரி படத்தில் அண்ணன் கேரக்டரில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
எஸ். எஸ். ஆர்-விஜயகுமாரி இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு எம்.ஜி.ஆர் அவர்களை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து வைத்தார். விஜயகுமாரிக்கு அண்ணன் என்ற முறையில் பிரம்மாண்ட விருந்து வைத்தார். பட்டுவேட்டு- பட்டு புடவை உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து ரூ.10,000 தொகையும் கொடுத்து எம்.ஜி.ஆர் இவர்களுக்கு சீர் வழங்கினார். இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விஜயகுமாரி எம்.ஜி.ஆரை அண்ணன் என்றும் ஜானகியை அண்ணி என்றும் அழைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“