மகனுக்கு முத்தம் கொடுத்தால் தப்பா? அழுக்கு ஜென்மங்கள்..! கொந்தளித்த பிக் பாஸ் விஜயலட்சுமி

Actress Vijayalakshmi Agathiyan hits back for being trolled on lip kissing her son Tamil News: மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

Actress vijayalakshmi agathiyan Tamil News: vijayalakshmi hits back for being trolled

Actress vijayalakshmi agathiyan Tamil News: பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான நடிகை விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்திருப்பவர். சினிமா அப்டேட்டுகள் முதல் குடும்ப புகைப்படங்கள் வரை அனைத்தையுமே தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

தவிர, இவரது இரு தங்கைகளான குக் வித் கோமாளி கனி மற்றும் நடிகை நிரஞ்சனி அகத்தியன் ஆகியோருடன் எடுக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார். மேலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி அவரது மகனுடன் புகைப்படம் எடுத்ததை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது மகனுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்திற்கு சில வலைதள வாசிகள் அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், ‘என்னதான் நெருக்கமான உறவாக இருந்தாலும் இது தேவை இல்லாத ஒன்று’ என்று கமெண்ட் செய்தும் ‘இது வெள்ளைக்காரன் கலாச்சாரம்’ என்று திட்டியும் வருகிறார்கள்.

இதில் கமெண்ட் செய்த ஒரு ட்விட்டர் வாசிக்கு பதிலடி கொடுத்துள்ள விஜயலக்ஷ்மி, “ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress vijayalakshmi agathiyan tamil news vijayalakshmi hits back for being trolled

Next Story
பாரதி கண்ணம்மா செட்டில் தூங்கி வழியும் இந்த நடிகை புதுசா? ரசிகர்கள் கண்டுபிடிச்சுட்டாங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com