மயக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisment
மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தான் வெளியேற்றப்பட்டதாக தெரிவத்த விஜயலட்சுமி, தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் .
நடிகை விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. நாம் தமிழர் சீமான், தன்னிடம் பேசினால், பிரச்சனை முடிவுக்கு வரும் என்று விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று, காயத்ரி ரகுராமும் தனது ட்விட்டர் கணக்கில், "விஜயலட்சுமி இப்போது நன்றாக இருக்கிறார். சோஷியல் மீடியா துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களால் அவர் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். ஒற்றையாக போராடும் பெண்ணாக அவர் நிறைய எதிர்கொண்டார். இணைய கொடுமைப்படுத்துதலை நிறுத்துங்கள். உங்களை கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil