நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

தமிழக திரையுலக நடிகை விஜயலட்சுமி மயக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழக திரையுலக நடிகை விஜயலட்சுமி மயக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

தமிழக திரையுலக நடிகை விஜயலட்சுமி மயக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது,  அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த  விஜயலட்சுமி, பாஸ் என்கிற பாஸ்கரன், மீசைய முறுக்கு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்கொலைமுயற்சிக்கு முன்பு, "தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், இதுவே தான் பேசும் கடைசி வீடியோ" என்ற உருக்கமான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

Advertisment
Advertisements

நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது ட்விட்ட்டரில், " இன்று விஜயலட்சுமியைப் பார்க்கவோ பேசவோ முடியவில்லை. எனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவரின் குடும்பத்தினரும்  பதிலளிக்கவில்லை. இருப்பினும், அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி அளிக்கின்றன" என்று தெரிவித்தார்.  மேலும், "இந்த கொரோனா  ஊரடங்கு மனச்சோர்வு மற்றும் தற்கொலை போக்குகளை அதிகரிக்கிறது" என்றும் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: