மீண்டும் நடிகை விஜயலட்சுமி சர்ச்சைப் பேட்டி… இந்த முறை ஹரி நாடார் தலையும் உருளுது!

தான் தங்கியிருந்த இடம் திடீரென காலி செய்யப்பட்டதால் ஆவேசம் அடைந்த நடிகை விஜயலட்சுமி, இந்த இடத்தில் ஹரி நாடார்தான் தங்க வைத்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

actress vijayalakshmi, vijayalakshmi, நடிகை விஜலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி பேட்டி, ஹரி நாடார், சீமான், seeman, hari nadar

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை விஜயலட்சுமி தற்போது ஹரி நாடார் குறித்து பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், சினிமா இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்பட்டவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு, அந்த சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். இந்த சூழலில்தான் நடிகை விஜயலட்சுமி, ஹரி நாடார் பற்றி ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஹரி நாடார் என்றாலே நெட்டிசன்கள் பலரும் அவரை நடமாடும் நகைக்கடை என்ற பட்டப்பெயருடனே அழைக்கிறார்கள். கைகளிலும் கழுத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துகொண்டு வலம் வரும் ஹரி நாடார், ‘பணங்காட்டுப் படை’ என்ற கட்சியை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். சினிமா ஃபைனான்ஸியராக இருக்கும் இவர் 2020ம் ஆண்டு நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட்டு 3வது இடத்தைப் பிடித்தார்.

அரசியலில் இறங்கி கவனத்தைப் பெற்ற ஹரி நாடார், 2K அழகானது என்ற தயாரித்து அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.

சென்னையில் வாடகை அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு தனது அப்பார்ட்மெண்ட்டிற்க்கு சென்றபோத, அங்கே ஒரு ஆண் இவரது அறையில் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், விஜயலட்சுமி 3 மாதங்களாக வாடகை தராததால் அவர் தங்கியிருந்த வீடு வேறு ஒருவருக்கு வாடகைக்கு தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

தான் தங்கிருந்த வீட்டை இப்படி வேறு ஒருவருக்கு திடீரென வாடகை விட்டதால் ஆவேசம் அடைந்த நடிகை விஜயலட்சுமி தன்னுடைய அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வைத்துவிட்டு செய்தியாளர்களிம் பேசினார். அப்போது, அவர் தன்னை இந்த அபார்ட்மென்டில் ஹரிநாடார் தான் தங்க வைத்ததாகவும் அவருக்கு தெரியாமல்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறினார். அதோடு, யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் பொருட்கள் எல்லாம் வெளியில் தூக்கிப் போட்டு உள்ளதாகவும் வாடகை தரவில்லை என்றால் தன்னை தங்க வைத்த ஹரி நாடாரிடம் பேச வேண்டியது தானே என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அபிபுல்லா சாலையில் இருக்கக்கூடிய இந்த இடத்தை அண்ணன் ஹரி நாடார்தான் அறிமுகப்படுத்தி வைத்தார். நான் கோவிட் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்த இடத்தில் பத்திரமாக இருங்கள். நாங்கள் வேறு இடத்தை சொல்லும் வரை இங்கே இருங்கள் என்று கூறினார்கள். இங்கே யாரும் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று ஹரி நாடார் அண்ணன்தான் பண்ணிகொடுத்தார்கள். நான் இங்க வந்து 2 மாதம் ஆகிறது. பணம் உதவி செய்யுங்கள் அண்ணே என்று நான் ஹரி நாடார் அண்ணனிடம் எதுவும் கேட்கவில்லை. பிறகு, பிரசாரத்துக்கு சென்றுவிட்டார். எனது அக்காவுக்கு கர்ப்பப் பை அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். நான் அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும்போது சில ஆண்கள் ரூமுக்குள் குளித்துக்கொண்டிருந்தனர். இது குறித்து போலீஸில் கூறினால், இதை பெரிசு பண்ணாதீர்கள். ரூம் தரச் சொல்கிறோம் என்று கூறுகிறார்கள். ஹரி நாடாரிடம் பணம் கேட்காதீர்கள் நான் தருகிறேன் என்று சொல்கிறேன். எனக்கு எதிராக இப்படி தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. இதை யார் செய்தாலும் சீமான் செய்தாலும் ஹரி நாடாருக்கு தெரியாமல் செய்தாலும் அவர்களை எல்லாம் கெஞ்சி கேட்டுக்கிறேன். தயவு செய்து எங்களை வாழ விடுங்கள்.” என்று கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி பணங்காட்டுப் படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் பற்றி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress vijyalakshmi says about hari nadar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com