மீண்டும் சூடு பிடிக்கும் சீரியல் நடிகை சித்ரா வழக்கு: கணவர் ஜாமின் ரத்து ஆகுமா? | Indian Express Tamil

மீண்டும் சூடு பிடிக்கும் சீரியல் நடிகை சித்ரா வழக்கு: கணவர் ஜாமின் ரத்து ஆகுமா?

சித்ரா தற்கொலை வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹேமந்த்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் சூடு பிடிக்கும் சீரியல் நடிகை சித்ரா வழக்கு: கணவர் ஜாமின் ரத்து ஆகுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் வழங்கில் அவரது கணவர் ஹெமந்த்க்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோகித் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சித்ரா. ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்பட நடிப்பு என பிஸியாக இருந்த சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பவர் மாதம் திடீரென மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக கூறி அவரது காதல் கணவர் ஹெமந்த கைது செய்யப்பட் நிலையில், அவரிம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹேமந்த்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இந்நிலையில் ஹெமந்தாத்திற்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோகித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சித்ரா தற்கொலை வழக்கில் மற்ற நண்பர்கள் யாரும் சாட்சி சொல்ல வராத நிலையில், தான் மட்டுமே சாட்சியம் அளித்ததாக கூறியுள்ளார்.

மேலும் தான் சாட்சியம் அளித்ததற்காக ஹேம்நாத் தன்னை கொலை செய்ய போவதாக கூறி மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ள அவர், ஹேம்நாத்தால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆபத்து இருப்பதால், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் சையத் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத் சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை இது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress vj chithra suicide husband hemandh friend syed filed case