நடிகை யாஷிகா ஆனந்த் ஜிம்மில் பளு தூக்கி உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸ் காட்டும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு புரோ நீங்களும் பளு தூக்குவிங்களா என்று கேட்டுள்ளார்.இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துவருகின்றனர்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி ஆகிய தமிழ் திரைபடங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விருந்தினராக வந்து கலந்துகொண்டார்.
நடிகை யாஷிகா டுவிட்டரில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பார். அந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் கம்மெண்ட் செய்வார்கள்.
அந்த வகையில், யாஷிகா ஜிம்மில் கடுமையாக பளு தூக்கி உடற்பயிற்சி செய்கிற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது ஃபிட்னஸ்ஸைக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வீடியொவில், புரோ நீங்களும் பளு தூக்குவீங்களா என்று குறிப்ப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த டுவிட்டர் பயணர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இதனால், யாஷிகா ஜிம்மில் பளுதூக்கி உடற்பயிற்சி செய்கிற வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.