சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ள நடிகை ஆதா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட் செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தற்போது நடிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு இந்தியில் வெளியான 1920 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஆதா சர்மா. தொடர்ந்து தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர், சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழில் சார்லி சாப்ளின்2 படத்தில் நடித்த ஆதா சர்மா தற்போது இந்தியில் தயாராகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் என்று கூறப்படும் நிலையில், படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் குமார் ஆதா சர்மாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் ‘தைரியமான படம்’ என்று கூறி படக்குழுவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். ஆனந்த் குமாருக்கு பதிலளித்த ஆதா சர்மா தனது ட்விட்டரில், “ஒரு கேரளாவிலிருந்து மேலும் ஒருவருக்கு ..ரொம்ப சந்தோஷம் நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
ரொம்ப சந்தோஷம் என்று ஆதா சர்மா பதிவிட்டது குறித்து கேள்வி எழுப்பிய ட்விட்டர் பயனர் ஒருவர் ‘ரொம்ப சந்தோஷம்’ என்பது மலையாள வெளிப்பாடு அல்ல. மலையாளத்தில் “வளரே சந்தோஷம்’ மற்றும் ‘ரொம்ப சந்தோஷம்’ இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ‘ரொம்ப சந்தோசம்’ தமிழ், மலையாளம் இல்லை. என்று ஆதா சர்மாவின் ட்விட்டர் பதிவு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
From one keralite to another ..romba sandosham ❤️🙏thank u https://t.co/an4Y4Ppv8W
— Adah Sharma (@adah_sharma) May 5, 2023
இதனிடையெ தனது தவறை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் பதிலளித்த ஆதா சர்மா “என் அப்பா ஒரு தமிழர் (அவர் இப்போது உயிருடன் இல்லை ஆனால் என் மனதில் உயிருடன் இருக்கிறார்) என் அம்மா ஒரு மலையாளி. இரு மொழிகளின் மீதும் அன்பு இருக்கிறது. அந்த அன்புடன் தமிழ் வார்த்தைகளை என் மலையாளத்தில் பயன்படுத்த என் பெற்றோர்கள் எப்போதும் என்னை அனுமதித்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும் மராத்தியில் அவர் சரளமாக பேசுவதை யாரோ ஒருவர் பாராட்டியபோது,“எனக்கு பள்ளியில் மராத்தி பாடமாக இருந்தது. நான் மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்தேன் என்று கூறியுள்ளார். அதேபோல் ஆதா சர்மா தனது ட்வீட் ஒன்றில் ‘கேரளா’ என்று தவறாக எழுதியுள்ளார், இதை கவனித்த ட்விட்டர்வாசிகள் குறைந்த பட்சம் மாநிலத்தின் பெயரையாவது சரியாக உச்சரிக்கச் வேண்டும் என்று கூறியுள்ளனர்.
My dad is a tamilian(he is no more now in body but remains alive in my mind) my mum is a malayali. They always allowed me to have Tamil words seep into my Malayalam and vice versa with only love for both languages. https://t.co/1vhRu3Drir
— Adah Sharma (@adah_sharma) May 5, 2023
தி கேரளா ஸ்டோரி உண்மைகளை தவறாக சித்தரிப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட 32,000 பெண்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியிருந்தனர். ஆனால், படம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த படம் மூன்று பெண்களின் கதையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படம் என்று ட்ரெய்லர் மாற்றப்பட்டது. தி கேரளா ஸ்டோர திரையரங்குகளில் முதல் நாளில் ரூ.7.5 கோடி வசூலித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“