New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Adah-Sharma-8.jpg)
அடா ஷர்மா
அடா ஷர்மா
‘தி கேரள ஸ்டோரி’ பட நடிகை அடா ஷர்மா வேதியியல் தனிம அட்டவணையை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வேதியியல் மாணவர்களுக்கு டிப்ஸ் வழங்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள ஸ்டோரி பிரபலம் நடிகை அடா ஷர்மா வேதியியல் தனிம அட்டவணை என்கிற Periodic Table -ஐ எளிதாக நினைவில் வைத்திருக்க வேதியியல் மாணவர்களுக்கு டிப்ஸ் வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
வேதியியல் படிக்கும் மாணவர்கள் ஹைட்ரஜன்,லித்தியன், சோடியம், ஹீலியம், உள்ளிட்ட வேதியியல் தனிமங்கள் பண்புகளை உணர்த்தும் அட்டவணையை நினைவில் வைத்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மாணவர்கள் இதை எளிதில் நினைவில் நிறுத்த ‘தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தில் நடித்த நடிகை, அடா ஷர்மா, டாம் லெகரர் என்பவைன் பாடலை பாடி கெமிஸ்ட்ரி மாணவர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். கெமிஸ்ட்ரி மாணவர்கள், வேதியியல் தனிம அட்டவணை என்கிற Periodic Table -ஐ எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள அடா ஷர்மா கொடுக்கும் இந்த டிப்ஸ் பாடலை கேளுங்கள். எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
வேதியியல் மாணவர்கள் பலரும் பீரியாடிக் டேபிளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுவதுண்டு. அவர்களுக்கு உதவும் விதமக அடா ஷர்மா அளித்துள்ள இந்த டிப்ஸை பலரும் பாராட்டி, வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர்,. இசையமைப்பாளார், பாடகர், கணிதவியலாளர் Tom Lehrer, இந்த வேதியியல் பீரியாடிக் லேபிள் பாடலை பாடியுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் சல்மான் கான் படத்துக்கே டஃப் கொடுத்தது.
தி கேரளா ஸ்டோரி படம் வெளியானதையடுத்து, இந்த படத்தில் நடித்த அடா ஷர்மா பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் நடிகையாகி இருக்கிறார். இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி ரூ.136 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.