சேலையில் உடற்பயிற்சி… கடற்கரையில் பல்டி: அட… அட… அடா ஷர்மா!

Adah Sharma's gymnastics video on the beach goes viral : சேலையில் உடற்பயிற்சி... கடற்கரையில் பல்டி: அட... அட... அடா ஷர்மா!

By: January 15, 2021, 8:23:58 PM

பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்த அதா சர்மா கடற்கரையில் குட்டிக்கர்ணம் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

 

அடா  ஷர்மா பெரும்பான்மையாக இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

 

 

 

சர்மா ஒரு சீருடற்பயிற்சியாளர் ஆவார். தனது மூன்றாம் வயதிலிருந்தே நடனம் ஆடி வருகிறார். இவர் மும்பையில் உள்ள நடராஜ் கோபி கிருஷ்ணா கதக் நடன அகாதமியில் கதக் நடனத்தில் பட்டம் பெற்றார். மேலும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சல்சா நடனம் கற்றுக் கொண்டார். மேலும் ஜாஸ், பாலே, இடை ஆட்டம் போன்ற நடனங்களையும் கற்றுக் கொண்டார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Adah sharmas gymnastics video on the beach goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X