நடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்தனர்.
Advertisment
நடிகர் ஜெயம் ரவி 'டிக் டிக் டிக்' படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் 'அடங்க மறு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ் தேதி
அண்மையில் அடங்க படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் 31ம்தேதி அடங்க மறு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மெகா சீரியல்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.