Ajith's Starrer Viswasam SingleTrackReleased: நீண்ட நாட்களாக செம்ம வெயிட்டிங்கில் இருந்த தல ரசிகர்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு வெளியான 'அடிச்சி தூக்கு சிங்கிள் டிராக்' மாஸ் விருந்தாக அமைந்துள்ளது. மாஸ் குத்தாக உருவாகியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் இமானே பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோவில், அஜித் பாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது நிச்சயம், அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.
Advertisment
சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
முதலில் விஸ்வாசம் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் டீசர் ரிலீஸ் குறித்த கேள்விகளை எழுப்பி வந்தனர். அவர்களை சாந்தப்படுத்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது பெரிய வரவேற்பை பெற்றதால் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட் கொடுக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
Viswasam First Single Adchi Thooku : அடிச்சி தூக்கு சிங்கிள் டிராக்
Advertisment
Advertisements
அந்த அறிவிப்பின்படி, இன்று மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது.
வீடியோவில் அஜித்தின் மாஸ் எக்ஸ்பிரஷனோடு, "Don-e டர்ராவான், தவுலத்து கிர்ராவான், வந்தாண்டா மதுரக்காரன்' என்று வரும் வரிகள் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அதுமட்டுமின்றி, படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதும் அந்த வீடியோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.