Advertisment

அதர்வா அதகளம்: முரளி பையன் இப்படி முரண்டு பிடிக்கலாமா?

Adharva Murali: அதர்வாவும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றியதைப் பார்த்து, முரளியின் பிம்பமாக அவரைப் பார்த்தவர்கள் உண்டு. ஆனால் லேட்டஸ்ட் நிலவரம் அப்படி அல்ல!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Adharva Murali Missing New Movies, நடிகர் அதர்வா, முரளி மகன் அதர்வா

Adharva Murali Missing New Movies, நடிகர் அதர்வா, முரளி மகன் அதர்வா

Adharva Murali Movies: நடிகர் முரளி, தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத நடிகர்! கடைசி வரை கல்லூரி மாணவராக நடித்தவர்! மோகனுக்கு பிறகு ‘மைக்’குடன் நெருங்கிய பந்தம் உருவாக்கிக் கொண்டவர் என்பதைத் தாண்டி, சினிமாவில் முரளியின் அர்ப்பணிப்பு அபாரமானது. அவரது மகன் அதர்வாவும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றியதைப் பார்த்து, முரளியின் பிம்பமாக அவரைப் பார்த்தவர்கள் உண்டு. ஆனால் லேட்டஸ்ட் நிலவரம் அப்படி அல்ல!

Advertisment

அதர்வா தனது படங்களுக்கு கதை கேட்பதிலும் பெரிய ஆர்வமாக இல்லை. சம்பளத்தில் தனது தந்தையைப் போல நீக்குபோக்காக நடப்பவராகவும் இல்லை. இதனால் கதை சொல்லப்போகும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதிருப்தி அடைகிறார்கள்.

அதர்வா, பாணாக் காத்தாடி படம் மூலம் அறிமுகமானார். அதற்குபின் சில படங்கள் வந்தாலும், பெரிய ப்ரேக் என்று சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை. சமீபத்தில் வந்த சொந்தபடமான இமைக்கா நொடிகள் படமும் முதலுக்கு மோசமில்லை என்ற அளவிலேயே ஓடியது. அதுவும் நயன்தாரா படமாகவே வந்து சென்றது.

பத்து படங்களை தொட்டுவிட்டாலும் முரளிக்கு கிடைத்த பூவிலங்கு போன்ற படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணம்தான், நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அலட்சியம்! நல்ல கதையுடன் சில இயக்குநர்கள் சென்றாலும், ‘கதையில் மாற்றம் செய்யுங்கள்’ என்று தலையிடுகிறாராம். அப்படியே கதை பிடித்திருந்தாலும் சிறிய தயாரிப்பாளர்கள் தலைசுற்றும் அளவு சம்பள‌ம் கேட்கிறார் என்று இவர் மீது புகார்கள் வருகின்றன.

நல்ல திறமையான இளம் நடிகர் அதர்வா. நல்ல கதையம்சமுள்ள இரண்டு மூன்று படங்களை ஒப்புக்கொண்டு, சம்பள‌ விஷயத்தில் வளரும் வரை கொஞ்சம் விட்டுக்கொடுப்பாரேயானால் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என பிரபல இயக்குநர்களே சொல்கின்றனர். செய்வாரா அதர்வா? பார்க்கலாம்!

திராவிட ஜீவா

Atharvaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment