ஆதிபுருஷ் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் திருப்பதி கோவில் சென்றிருந்தபோது அவரை திடீரென கட்டிப்பிடித்த ஆதிபுருஷ் பட இயக்குனர் ஓம் ராவத் முத்தமிட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் அதிபுருஷ். இயக்குனர் ஓம் ரவாத் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சனோரன், சையப் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ராமாயணத்தை அடிப்படையாகா வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம வரும் 16-ந் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குவினர் தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பதியில் அதிபுருஷ் படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று திருப்பதி வந்த நாயகன் பிரபாஸ் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை படத்தின் நாயகி கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்தனர்.
அப்போது இருவரும் அதிபுருஷ் படம் வெற்றி பெற வேண்டிக்கொண்ட நிலையில், தரிசனம் முடிந்து வெளியே வந்த இருவரும் ரசகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு கிளம்ப தயாரான கீர்த்தி சனோனை வழியனுப்ப அவரது காருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இயக்குனர் ஓம் ராவதை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வைத்த கீர்த்தி சனோனுக்கு திடீரெ ராவத் முத்தம் கொடுத்துவிட்டார்.
இதை சற்றும் எதிர்பராத கீர்த்தி சனோன் அதிர்ச்சியடைந்தாலும் அதன்பிறகு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இயக்குனரின் இந்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“