/indian-express-tamil/media/media_files/2025/09/22/athira-2025-09-22-16-46-31.jpg)
SJ Suryah & Kalyan Dasari in Adhiran Movie first look
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி இந்திய அளவில் பெரிய வெற்றிப்படமாக மாறிய ஹனுமன் படத்தின் இயக்குனா பிரஷாந்த் வர்மா, தனது சினிமாட்டிக் யூனிவர்ஸின் அடுத்த படமாக அதிரா என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், இந் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அறிமுக நாயகன் கல்யாண் தாசரி, சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கிறார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
எரிமலை வெடிப்பு மற்றும் புயல் நிறைந்த வானத்தின் பின்னணியில், வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், எஸ்.ஜே. சூர்யா கொம்பு தலைக்கவசம் மற்றும் பழங்குடி கவசம் அணிந்திருப்பது போல் ஒரு அற்புதமான அவதாரத்தில் தோன்றுகிறார், அதே நேரத்தில் கல்யாண் தாசரி தீவிரமான உறுதியுடன் மண்டியிடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரது உறுதி போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.
ஷரன் கோப்பிசெட்டி இயக்கியது மற்றும் ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் கீழ் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரித்த, அதிரா, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோ கேரக்டர்களில் முக்கிய படங்களில் ஒன்றாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முக்கிய கேரக்டர் மின் ஆற்றலை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அவரது ஆயுதம் புராண வஜ்ராவை ஒப்பிடும் வகையில் இருக்கிறது. இது புராணங்களுக்கும் நவீன கற்பனை கதைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது.
குறிப்பிட்ட கதைக்கள விவரங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அதிரா உயர்-ஆக்டேன் அதிரடி காட்சிகளையும் வலுவான காட்சி விளைவுகள் கூறுகளையும் அதிகமாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். சமீப காலமாக வில்லன் கேரக்டரில் அதக்களம் செய்து வரும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது, அவரது வில்லன் கேரக்டர் தாசரியின் சூப்பர் ஹீரோவுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரஷாந்த் வர்மா சினிமாட்டிக் யூனிவர்ஸின் தொடக்கத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்த ஹனுமன் திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த வரிசையில் வந்த மிராய் தற்போது திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் அதிரா வெற்றியை உருவாக்கி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோ படங்களுக்கு மைல்கல்லாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
When darkness blooms the world, a LIGHTNING of hope emerges ❤️🔥
— RKD Studios (@RKDStudios) September 22, 2025
Presenting @IamKalyanDasari and @iam_SJSuryah in #ADHIRA ⚡️
A New SUPERHERO from #PrasanthVarmaCinematicUniverse 💥💥💥
Created By @PrasanthVarma
An RKD Studios Production
Presented By RK Duggal
Directed By… pic.twitter.com/gDJl9lfy1T
படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் கூடுதல் விளம்பரப் பொருட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் முதல் பார்வை, ஆதிரா புராணம், கற்பனை மற்றும் அதிரடியை ஒரு சினிமா காட்சியாக கலக்க நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.