Adipurush Box Office Collection Day 3: ஷாருக் படத்தை வீழ்த்திய ஆதிபுரூஷ்; 3 நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?
பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் முதல் வார இறுதியில் இந்தியாவில் ரூ.65 கோடிக்கும், உலகளவில் ரூ.340 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் முதல் வார இறுதியில் இந்தியாவில் ரூ.65 கோடிக்கும், உலகளவில் ரூ.340 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைகள் மற்றும் சில வசனங்களுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் சுமார் 340 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisment
பாகுபலி படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அதன்பிறகு ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நேரத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்திருந்தார். கீர்த்தி சனோன், சையப் அலிகான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் கடந்த ஜூன் 16-ந் தேதி உலகளவில் வெளியானது.
இந்தி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் 5 முக்கிய மொழிகளில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்த வருவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட ஆதிபுருஷ் உலகளவில் 3 நாட்களில் ரூ340 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டிசீரிஸ் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதிபுருஷ் திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ 340 கோடியை கடந்துள்ளது.ஜெய் ஸ்ரீ ராம் என்று பதிவிட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் வெளியான 3 நாட்களில் 300 கோடி வசூலை குறித்த 2-வது திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது ஆதிபுருஷ்.
Advertisment
Advertisements
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ 313 கோடி வசூலித்தாலும், பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் ரூ 340 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள், மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்கள் என எதிர்ப்புகள் இருந்தாலும், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது ட்விட்டர் பதிவில், ஆதிபுருஷ் படத்தில் 4000 வரிகளுக்கு மேல் எழுதியிருந்தாலும், "ஐந்து வரிகளால்" மக்களின் உணர்வுகள் புண்பட்டதாகக் தெரிவித்துள்ளர். மேலும் "எனது வசனங்களுக்கு ஆதரவாக பல வாதங்களை என்னால் கொடுக்க முடியும், ஆனால் இது உங்கள் வலியைக் குறைக்காது. உங்களைப் புண்படுத்தும் சில வசனங்களை நாங்கள் திருத்த வேண்டும் என்று நானும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனரும் முடிவு செய்துள்ளோம். இந்த வாரம் படத்தில் அந்த மாற்றங்கள் நடக்கும்.. உங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமர் அருள் புரியட்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே டி சீரிஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பொதுக் கருத்தைப் பொறுத்தமட்டில் மக்கள் மற்றும் பாரசிகர்களின் உள்ளீட்டை மதிப்பிடும் ஒரு ஒருங்கிணைந்த திரைப்பட அனுபவத்திற்காகவும், CBFC இன் ஆலோசனையின் பேரில் வசனங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதன் விஷுவல் எஃபெக்ட்களுக்காகவும் ஆதிபுருஷ் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே ரசிகர்கள் பலரும் இது குறித்து விமர்சனங்களை கூறியிருந்தனர். இதனை சரி செய்வதற்காக படக்குழு படத்தில் வெளியீடு தேதியை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“