Adithya Varma Tamil Movie Review & Ratings: தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ”ஆதித்ய வர்மா” இன்று வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இப்படம், தயாரிப்பின் போது, இயக்குநர் மாற்றத்தால் சில ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தது. படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வியாபாரத்தை செய்தன.
அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக இருந்த, கிரீசயா ஆதித்யா வர்மாவை இயக்கியுள்ளார். இதில் துருவிற்கு ஜோடியாக பனிதா சந்து நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்துக்கு, இசையமைத்த ரதன் தான், ஆதித்ய வர்மாவுக்கும் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வெளியான ”அர்ஜூன் ரெட்டி” விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்தி பதிப்பான ”கபீர் சிங்” கூட ஷாகித் கபூரின் திரை வாழ்க்கையில் முக்கியப் படமாக கருதப் படுகிறது. இதே போல் ஆதித்ய வர்மாவும் அமைந்தால், அது துருவ் விக்ரமுக்கு நல்ல துவக்கமாக இருக்கும்.
இந்நிலையில் ஆதித்ய வர்மா குறித்து இணையத்தில் நிறைய விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு விடுகிறோம்.
#AdithyaVarma First half review: A star is born @DhruvVikram8 is the biggest highlight of this faithful remake. His performance, screen presence and star charisma is ???????????? @e4echennai #DhruvVikram #KollywoodWelcomesPrinceDHRUV pic.twitter.com/tEx3vGdHLE
— sridevi sreedhar (@sridevisreedhar) November 22, 2019
ஒரு நட்சத்திரம் பிறந்து விட்டது. துருவ் விக்ரம் இந்த உண்மையான ரீமேக்கின் மிகப்பெரிய சிறப்பம்சம். அவரது நடிப்பு, திரை இருப்பு மற்றும் நட்சத்திர கவர்ச்சி சூப்பர்.
#AdithyaVarma - 3.25/5.. #DhruvVikram @DhruvVikram8 delivers a towering, powerhouse performance. ???? ???? One of the best possible debut performances ???????? Super future ahead.
Good support actors too. Grt music.
— Kaushik LM (@LMKMovieManiac) November 22, 2019
துருவ் விக்ரமின் நடிப்பு அபாரமாக உள்ளது. சிறந்த அறிமுகப்படம். நல்ல எதிர்காலம் உண்டு.
Whoever made the decision to cast Banita Sandhu in #AdithyaVarma. Great call. Loved what she has done with the role.
— Suganth (@msuganth) November 22, 2019
பனிதாவை ஹீரோயினாக போட்டது சிறப்பு. அவரது கதாபாத்திரம் அருமையாக உள்ளது.
#AdithyaVarma: A faithful and safe remake of Arjun Reddy that does what it should. Good work on the transition, as it will manage to engage you even if you've seen the other two versions. @DhruvVikram8 is undoubtedly the star of the show, a brand new talent who's here to stay!
— Sidhu (@sidhuwrites) November 22, 2019
ஆதித்யவர்மா, அர்ஜுன் ரெட்டியின் உண்மையான மற்றும் பாதுகாப்பான ரீமேக். மற்ற இரண்டு பதிப்புகளையும் நீங்கள் பார்த்திருந்தாலும், இதில் ஈடுபட வைக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி இப்படத்தின் நட்சத்திரம் துருவ் விக்ரம்.
#AdithyaVarmaReview Not even 50% of #ArjunReddy impact..
Instead of remaking it they could have dubbed and released #ArjunReddy..It would have become bigger hit than #AdithyaVarma.
One word- D I S A S T E R ????
— VISWASAM ana THALA Fan™ ???? (@TAF_OFF) November 22, 2019
ஆதித்ய வர்மா அர்ஜூன் ரெட்டியின் 50% கூடத் தெரியவில்லை. ரீமேக் செய்வதற்கு பதிலாக அர்ஜூன் ரெட்டியை டப்பிங் செய்து ரிலீஸ் செய்திருக்கலாம். நிச்சயம் அது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.