அமேசான் பிரைம் வீடியோ தொடரான ஜூபிலியின் திரையிடல் வியாழக்கிழமை (ஏப்.6) மும்பையில் நடைபெற்றது.
இதில், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் அவரது காதலன் என கிசுகிசுக்கப்படும் நடிகர் சித்தார்த்தும் கலந்து கொண்டார். தொடர்ந்து இருவரும் சிவப்பு கம்பள வரவேற்பில் நின்றபடி புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்தனர்.
-
சித்தார்த்-அதிதி ராவ்
அதிதியும் சித்தார்த்தும் காதலிப்பதாக ஊகங்கள் பரவி வருகின்றன, ஆனால் இருவருமே அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இந்த நிலையில், கடந்த மாதம், அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் உடனான தனது உறவு குறித்த வதந்திகளை உரையாற்றினார். அப்போது அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இந்த விஷயங்களை தாம் காதில் போட்டுக் கொள்வதில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்கிறேன் என்றார். எனினும் தொடர்ச்சியான இதுபோன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“