அதிதி ராவ் ஹைதாரி- சித்தார்த் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. எளிமையாக, அழகாக நடந்த விழாவில் இவர்கள் திருமண நடந்துள்ளது. இந்து முறைப்படி நடந்த விழாவின் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
சித்தார்த்- அதிதி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது சித்தார்த் குர்தா மற்றும் பட்டு வேஷ்டியிலும் அதிதி கோல்டன் கலர் ஆர்கன்சா லெஹங்கா உடன் அழகான ரூபி மற்றும் தங்க நகைகள் அணிந்து அழகாக இருந்தனர்.
திருமணப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இருவரும் அதில், " நீ என் சூரியன்,
நீ என் சந்திரன், நீ என் நட்சத்திரம்.. முடிவில்லா காதல், ஒளி, மேஜிக். மிஸ்டர், மிஸஸ் அது-சித்து" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதிதி மற்றும் சித்தார்த்தின் ரகசிய திருமணம் அவர்களின் ரசிகர்களையும் நண்பர்களையும் ஆச்சரியப்படுத்தியது, மேலும் அவர்கள் சமூக வலைதளத்தில் அவர்களுக்கு அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சோனாக்ஷி சின்ஹா, அதியா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“