Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
Screen Logo
பொழுதுபோக்கு

அதிதி ராவ் - சித்தார்த்த் திடீர் நிச்சயதார்த்தம்... வதந்திக்கு முற்றுப்புள்ளி : மோதிர புகைப்படங்கள் வைரல்

அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளனர்.

Written by WebDesk

அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
28 Mar 2024 17:20 IST

Follow Us

New Update
siddathaditi

அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Advertisment

2007-ம் ஆண்டு வெளியான சிருங்காரம் என்ற படத்தின் மூலம் அதிதி ராவ். அதன்பிறகு இந்தி படங்களில் நடித்த இவர், 2017-ம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மகாசமுத்திரம் படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இணையதளங்களில், அதிதி – சித்தார்த் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து இவருமே எந்த பதிலும் சொல்லாமல் இருந்தனர். இதனிடையே தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

Advertisment
Advertisements

‘’என்கேஜ்டு’’ என்று அதிதி ராவ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், சித்தார்த்தும் அதே புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “அவள் ஆம் என்று சொன்னாள் என்று பதிவிட்டுள்ளார். இருவருமே தங்கள் புகைப்படங்களில் குறிக்கப்பட்ட இடம் வனபர்த்திக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கபுரம் என்று தெரிகிறது. அதே இடத்தில் இருந்து இவர்களது திருமணம் பற்றிய செய்திகளும் வெளியாகின.

View this post on Instagram

A post shared by Siddharth (@worldofsiddharth)

2023 இல் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், சித்தார்த் அதிதியை தனது "பார்ட்னர்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு இவர்களுக்கு இடையிலான காதலை உறுதி செய்தது. ஆனால் அதற்கு முன், இது பிப்ரவரி 2023 இருவரும் சேர்ந்து ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த ஜோடி உண்மையில் டேட்டிங்கில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்தது.

View this post on Instagram

A post shared by Siddharth (@worldofsiddharth)

2023 இல் இந்தியா டுடே உடனான ஒரு அரட்டையில், அதிதி தனது தனிப்பட்ட வாழ்க்கை தனக்கு ‘புனிதமானது’ என்று கூறியிருந்தார். மேலம் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பம், நண்பர்கள் அல்லது யாராக இருந்தாலும், அது எனக்கு மிகவும் புனிதமானது. இது பொது வெளியில் பகிர்ந்துகொள்வதற்கு அல்ல. இந்த விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் இருப்பதாக நான் நினைக்கிறேன், அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

அதே சமயம் சித்தார்த் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தியன் எனக்ஸ்பிரசுடன் அவர் அளித்த பேட்டியில்,, “நான் வணிகத்தில் ஆறு மாதங்கள் இருந்திருந்தால், ஒரு பிரபலமான நபரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் நபராக நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், இது ஒரு சுவாரஸ்யமான பதிலாக இருந்திருக்கும். நான் என் வாழ்நாளில் பாதியாக இதைச் செய்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

அதிதி முன்பு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். சத்யதீப் 2023 இல் மசாபா குப்தாவை மணந்தார். சித்தார்த் முன்பு மேக்னா என்ற பெண்ணை மணந்தார். இவர்கள் திருமணம் நான்கு ஆண்டுகள் நீடித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aditi Rao Hydari Siddharth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!