டிக்டாக் ஆப் மூலம் பிரபலான ஜி.பி.முத்து தற்போது திரைத்துரையில் நடிகராக உயர்ந்துள்ள நிலையில், தனது குடும்பமே அதிமுகவுக்கு ஆதரவு என்று சமீபத்தில் அவர் பேசி வீடியோ காட்சியை அதிமுகவினர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. மர பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவர், டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான இவர், டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்ட நிலையில், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதில் அவர் தனக்கு வரும் லெட்டர்களை படித்து காட்டி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பிரபலம்.
இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஜி.பி.முத்துக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் ஜி.பி.முத்து சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உலகம் அறியாதவர் போல் இருக்கும் இவர், ஆதாமா யாரு அது எங்க இருக்காரு என்று கேட்டு பிக்பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசனையே மலைக்க வைத்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திலேயே தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லலை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ஜி.பி.முத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதிமுக குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், எனது தந்தை அவரது தந்தை என அனைவருமே அதிமுக ஆதரவுதான். எனது அம்மாவும் அதிமுக ஆதரவு தான். எனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். இரும்பு பெண்மணியான அவர் தனது வாழ்ந்நாளில் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் வாழ்ந்துள்ளார். அதனால் அவரை எனக்கு மிகுவும் பிடிக்கும் அவர் இறந்தபோது தான் ஒருநாள் முழுவதும் அழுதேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவை வைரலாக்கி வரும் அதிமுகவினர், ஜி.பி.முத்து எம்.ஜி.ஆர்.சிலைக்கு அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“