ஆங்கிலத்தில் படிக்க...
லியோ படத்தில் இடம்பெற்றுள்ள அன்பெனும் என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஏற்கனவே வெளியான 2 அதிரடி பாடல்களை போல் இல்லாமல் காதல் பாடலாக வந்த இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான நா வரவா, பாடஸ் ஆகிய இரு அதிரடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் லியோ படத்தின் 3-வது பாடலான அன்பெனும் என்ற பாடல் நேற்று வெளியானது. மற்ற இரு பாடல்களும், அதிரடியாக இருந்த நிலையில், இந்த பாடல் மென்மையான காதல் பாடலாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லியோ படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தாலும், இசையமைப்பாளர் அனிருத் சற்று விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இவரின் பாடல்கள் பலரின் பாராட்டுக்களை பெற்று வந்தாலும், ஒரு சிலர் ஒரு சில இசையமைப்பாளர்கள் தங்களது படங்களில் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர்களே முழு பாடலையும் பாடிவிடுகிறார்கள் என்று கூறப்படும் நிலையில், அந்த வரிசையில் தற்போது அனிருத் இணைந்துள்ளார்.
லியோ படத்தில் இருந்து இதுவரை வெளியாகியுள்ள 3 பாடல்களில் அன்பெனும் மற்றும் படாஸ் ஆகிய 2 பாடல்களை அனிருத் பாடியுள்ளார்.. அதேபோல் ஜவான் (தமிழ்), படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களில் 4 பாடல்களை இவரே பாடியிருந்தார். இதன் மூலம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள அனிருத் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே ஏற்கனவே ஃபிலிம் கம்பேனியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனக்கு பாடுவதில் ஆர்வம் இல்லை என்றும், எப்போதும் தன்னை ஒரு மோசமான பாடகராகவே உணர்கிறேன் என்றும் அனிருத் கூறியிருந்தார். இருப்பினும், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதால், அவர் ஒரு பாடகராக தன்னை வெளிப்படுத்தியதாகவும், தனது ஆல்பங்களில் மட்டுமல்ல, மற்ற இசைக்கலைஞர்களால் இசையமைக்கப்பட்ட ஆல்பங்களிலும் அதிகமாகப் பாடத் தொடங்கியதாகவும் தெரிவித்துள் அனிருத், பணத்தை விட அனுபவமே அதிகம் என்பதால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு இலவசமாக பாடுவதாக கூறியிருந்தார்.
இருப்பினும், இசையமைப்பாளர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதால், அனிருத் தனது பாடகர் திறமையை வெளிக்கொண்டு வருவதை நிறுத்த முடியவில்லை. ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் அந்த படங்களிலும் பாட வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஜவானின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டில் அதிக திரைப்படங்களை உருவாக்கப் போவதாகவும் அனிருத் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“