Advertisment

ஷாருக்கான், அனுஷ்கா சர்மா வரிசையில் அமிதாப் பச்சன் : அலிபாக் நகரில் நிலம் வாங்கிய மற்ற பிரபலங்கள் யார்?

இந்தியாவின் கடற்கரை நகரமான மும்பைக்கு அருகில் உள்ள அலிபாக், இந்திய பணக்காரர்கள், குறிப்பாக சினிமா பிரபலங்கள் நிலம் வாங்க விரும்பும் முக்கிய இடமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Amithabh Shahrukh

அமிதாப் பச்சன், ஷாருக்கான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அமிதாப் பச்சன், தற்போது மும்பைக்கு அருகில் உள்ள அலிபாக் நகரில் 10 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ள இவர், ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், அவ்வப்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அமிதாப் பச்சன், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரையும் பின்பற்றும் வகையில், ஒரு முக்கிய இடத்தில் நிலம் வாய்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க : After Shah Rukh Khan and Deepika-Ranveer, Amitabh Bachchan buys land in Alibaug. Check out other celebs who own luxurious homes in coastal town

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள் அதிகம் நிலம் வாங்கும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும், மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகிலுள்ள அலிபாக் நகரில் அமிதாப் பச்சன் சமீபத்தில் 10,000 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலம், அபிநந்தன் லோதா இல்லத்திடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரம் இந்த நிலத்திற்காக பரிவர்த்தனை மற்றும் பதிவு செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின்படி, அமிதாப் பச்சன், 20 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட ஏ அலிபாக் என்ற ரியல் எஸ்டேட் சதித்திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அமிதாப் பச்சன், இந்த பில்டரிடமிருந்து நிலம் வாங்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, கடந்த ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் சரயு நதிக்கரையில் 7-நட்சத்திர ப்ளாட் டெவலப்ட் செய்யப்பட்ட 10,000 சதுர அடி நிலத்தை ரூ.14.5 கோடிக்கு வாங்கினார்.

அலிபாக் பீச் மற்றும் வர்சோலி பீச் போன்ற கடற்கரைகளுக்குப் பெயர் பெற்ற கடற்கரை நகரமான அலிபாக், இந்திய பெரும் பணக்காரர்கள், குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு, நிலம் வாங்குவதற்கான முக்கிய இடமாக மாறியுள்ளது. வரும் காலங்களில்  ஏராளமான நட்சத்திரங்கள் ஆடம்பரமான சொத்துக்களில் முதலீடு செய்து, பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களின் விளையாட்டு மைதானமாக அலிபாக்கை மாற்ற வாய்ப்புள்ளது.

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான் மற்றும் நட்சத்திர ஜோடிகளான அனுஷ்கா ஷர்மா விராட் கோலி, தீபிகா படுகோன் ரன்வீர் சிங், நடிகர் ராகுல் கண்ணா மற்றும் பேஷன் ஸ்டைலிஸ்ட் அனிதா ஷ்ராஃப் அடாஜானியா மற்றும் அவரது கணவர் ஹோமி அடாஜானியா வரை, பலரும் அலிபாக் நகரில் குறிப்பிடத்தக்க நிலத்தை வைத்துள்ளனர்.

இது குறித்து பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கருத்தின்படி, அலிபாக் நகரில் ஷாருக்கானின் வீடு, அதி ஆடம்பரமான ஃபார்ம்ஸ் ஆகும், கிரிக்கெட் வீரர் கோஹ்லி மற்றும் அவரது மனைவி நடிகர்-தயாரிப்பாளரான அனுஷ்கா ஷர்மா, இதே பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ரூ.10.5 முதல் 13 கோடி வரை மதிப்புள்ள 4பிஎக்கே  வில்லாவில் முதலீடு செய்தனர் என என்டடெயின்மெண்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் கடந்த ஆண்டு அலிபாக் பகுதியில் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். 2023 ஆம் ஆண்டில், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் கணிசமான ரூ. 22 கோடி முதலீடு செய்து, மாப்கானுக்கு அருகிலுள்ள அலிபாக் பகுதியில் 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பங்களாவை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amitabh Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment