சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமிழ் நடிகை : ஊ சொல்றியா பாடலுக்கு போட்டி வந்தாச்சு…

Tamil CInema Update : பிரபல தமிழ் நடிகை ரெஜினா நடனமாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Again One Item Song From Chiranjeevi Acharya Movie In Telugu Cinema : தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரிலும், தமிழில் அஜித் நடிப்பில வெளியான வேதாளம் படத்தை தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரிலும் ரீமேச் செய்து நடித்து வருகிறார்.

இதற்கிடையே தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்கி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம்சரன் தனது தந்தையுடன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தையும் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனு சூட், கிஷோர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது ஆச்சார்யா படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தமிழ் நடிகை ரெஜினா நடனமாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மணிசர்மா இசையமைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடல் புஷ்பா படத்தில் பாடலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகினறனர்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கிலும பரபரப்பை கிளப்பியது. தேவி ஸ்ரீ பிரசாரத் இசையில் உருவான இந்த பாடலை தமிழில் நடிகை ஆண்ட்ரியா பாடியனர். இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். ஆண்களை இழிவான சித்தரிக்கும் விதமாக அமைந்தா இந்த பாடலுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் புஷ்பா படத்திற்கு போட்டியாக ஆச்சார்யா படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த பாடல் தற்போதுவரை ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. 2.8 லட்சம் பேர் இந்த பாடலை லைக் செய்துள்ளனர்.   .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Again one item song from chiranjeevi acharya movie in telugu cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com