நயன் ரசிகர்களே ரெடியா? இன்று ஐரா படம் பாடல் ரிலீஸ்
இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தில் இருந்து மேகதூதம் என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியது.
நயன் நடிப்பில், கடந்த ஆண்டு இறுதியாக வெளியான கோலமாவு கோகிலா படம் முதல் இந்த ஆண்டின் முதல் ரிலீசான விஸ்வாசம் வரை லேடி சூப்பர் ஸ்டார் படமெல்லாம் வேற லெவல் ஹிட் தான். இந்த ஆண்டு விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, இரண்டாவதாக ‘ஐரா’ படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
ஐரா படம் பாடல் ரிலீஸ்
அதன் முன்னோட்டமாக இன்று இப்படத்தின் மேகதூதம் என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாக இருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் இப்பாடல் வெளியாகும் என்று நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
#Megathoodham – first single from #Airaa will be out at 5 PM tomorrow! #AiraaFirstSingle ???????? pic.twitter.com/65NDsW5nvm
— Nayanthara✨ (@NayantharaU) 4 February 2019
இப்பாடலுக்கு தாமரை வரிகர் எழுதியிருக்கிறார், பாடகி பத்மபிரியா ராகவன் பாடியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் :
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.
#AiraaFirstSingle Bhavani’s anthem – #Megathoodham here it is ????????//t.co/xQ2y83YCKj
— Nayanthara✨ (@NayantharaU) 5 February 2019
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.