/tamil-ie/media/media_files/uploads/2019/02/Airaa-Second-Single-Kaariga.jpg)
Nayanthara's Airaa Review Live updates
Airaa Second Single Kaariga : இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்திருக்கும் ஐரா படத்தில் இடம்பெற்றுள்ள காரிகா பாடல் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள "ஐரா" திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் "ஐரா". கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
Airaa Second Single Kaariga : ஐரா படத்தின் 2வது பாடல் காரிகா
படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மேகதூதம் என்ற பாடல் பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்டனர்.
தாமரை வரிகளில் பத்மபிரியா ராகவன் பாடியிருக்கும் இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. கே. எஸ் சுந்தமூர்த்தி இசையமைப்பில் இப்படத்தில் உள்ள மற்றொரு பாடலும் இந்த வாரம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#AiraaSecondSingle. Get ready to listen to... *drum roll* #Kaariga! pic.twitter.com/yTWC6ol7gw
— Nayanthara✨ (@NayantharaU) 27 February 2019
இந்த இரண்டாவது பாடல் கா எழுத்தில் தொடங்கும் என்றும் அது என்ன என்று கண்டுபிடிக்கும்படி படக்குழுவினர் பதிவிட்டிருந்தனர். அதை அடுத்து தற்போது அப்பாடல் காரிகா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலை மதன் கார்கி வரிகளில் சிட் ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.