’பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தணும்’ – நயன்தாராவா இப்படி சொல்றாங்க?

Nayanthara’s Airaa Trailer Release: நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Nayanthara-Airaa Movie Review Live updates
Nayanthara-Airaa Movie Review Live updates

Airaa Trailer Release : இரட்டை வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ஐரா படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் விஸ்வாசம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘கொலையுதிர்க்காலம்’, ‘ஐரா’, ’சைரா நரசிம்மரெட்டி’, ’மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

Airaa Trailer Release : ஐரா டிரெய்லர் ரிலீஸ்

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கிய நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

”இப்போ இருக்குற இண்டர்நெட் சினாரியோவுல காண்ட்ரோவெர்ஸியலா கண்டெண்ட் போட்டா தான் ஆடியன்ஸ் பாப்பாங்க. சூப்பரா இருக்குற படத்த மொக்கன்னு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தணும், எது நடந்தாலும் இலுமினாட்டி தான் காரணம்ன்னு சொல்லணும்” என இல்லாத பேயை இருப்பதாகக் காட்ட மெனக்கெடும் நயன், அதன் பின் சந்திக்கும் விளைவுகள் தான் படம் என டிரைலரிலேயே தெரிகிறது.

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இந்த டிரைலர் ஐரா படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airaa trailer release

Next Story
லுங்கியை மடிச்சு கட்டிட்டு ஆடும் விஜய்… வைரலாகும் தளபதி 63 வீடியோthalapthy 63 shooting spot, தளபதி 63
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express