/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-16T133457.473.jpg)
airport looks, airport look, Kareena kapoor photos, jahanvi kapoor photos, aditya roy kapur photos, sani amirza photos, deepika padukone photos, indian express, indian express news
பாலிவுட் நட்சத்திரங்களின் ஏர்போர்ட் படங்களில் யார் உங்கள் பேவரைட் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்..
பாலிவுட் திரைநட்சத்திரங்களின் படங்கள் அவ்வப்போது மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அவர்கள் ஏர்போர்ட்களில் மற்றவர்களை போல சாதாரண உடையணிந்து வரும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும்விவாதப்பொருளாக மாறும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தின் முற்பகுதியில், ஏர்போர்ட்களில் கிளிக் செய்யப்பட்ட சில பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து பார்ப்போம்..
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
ஏர்போர்ட் கிளிக்கில் முதலாவதாக வருவது ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி. ரன்வீர் சிங், பிளைன் ஒயின் டி சர்ட், டெனிம் ஸ்னீக்கர்ஸ், தீபிகா ஸ்லீவ்லெஸ் கேமிசோல், ஜீன்ஸ் பேண்ட், இரண்டு பேரும் சன் கிளாஸ் அணிந்திருந்தனர்.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். இன்னும் கோலிவுட்டில் அறிமுகம் ஆகாதபோதிலும், தமிழ் உள்ளிட்ட இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். ஸ்ரீதேவியை போன்று, இவரும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான மேக்கப், அழகான உடை இவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
மலைக்கா அரோரா
வயசு ஆனாலும், உன் இளமை குறையல என்பதற்கு பாலிவுட்டின் சிறந்த எடுத்துக்காட்டு மலைக்கா அரோரா. ஒயிட் சர்ட், விண்டேஜ் வகையிலான கீழ் உடை புதுவிதமாக உள்ளது.
ஹியூமா குரேஷி
தமிழில் காலா என்று ஒருபடத்தில் நடித்துள்ளபோதிலும், தமிழ் ரசிகர்களையும் தன் நடிப்பால் வசீகரித்தவர். டெனிம் சட்டை மற்றும் பேண்ட்டில் அட்டகாசம்.
அதிதி ராவ் ஹிதாரி
செம கம்பர்ட்டான டிரஸ், சிம்பிளி கிரேட்
கரீனா கபூர் கான்
பிளாக் டிசர்ட், செல்சியா பூட்ஸ், ரெட் லிப்ஸ்டிக் என சாதாரணமாக கொள்ளை அழகு
சானியா மிர்சா
கேசுவல் ஒயிட் சர்ட் வித் ஸ்னீக்கர்ஸ், புளு ஸ்லிங் பேக் என சிம்பிளியா நல்லா இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.