சமூக வலைதளமான டுவிட்டரில் தனது பெயரை ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்பதை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிக் கொண்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா தனது டுவிட்டரில் கணக்கில் தனுஷ் பெயரை நீக்காமல் இருந்து வந்தார்.
இதனால், இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில், தனுஷ் பெயரை நீக்கிவிட்டு தனது தந்தையான ரஜினிகாந்த் பெயரை சேர்த்துள்ளார் ஐஸ்வர்யா.
தற்போது இந்தியில் படம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 22, 2022
ஆண்ட்ரியாவுக்கு கோல்டன் விசா
ஐக்கிய அரபு அமீரக அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்த விசாவை நடிகை ஆண்ட்ரியாவுக்கு வழங்கி கெளரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.
ஏற்கனவே, சஞ்சய் தத், மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், அமலா பால், காஜல் அகர்வால், மீனா உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாடப் புத்தகத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு: கர்நாடக அரசு யோசனை
புனித் ராஜ்குமாரின் திரை வாழ்க்கை மற்றும் சமூக சேவை குணத்தை பெருமைப்படுத்தும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் புனித்.
அவர் சினிமாவை தாண்டி பல ஏழைகளுக்கு உதவிகள் செய்ததோடு 119 கோசாலைகள் 16 முதியோர் இல்லங்களை நடத்தி வந்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி உதவியும் செய்து வந்தார். தனது சம்பளத்தில் பெரும் பகுதியை சமூக சேவை பணிகளுக்கு செலவிட்டுள்ளார்.
இந்நிலையில், கர்நாடகத்தில் 4 அல்லது 5-ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை பற்றிய அத்தியாயத்தை சேர்க்கலாம் என்று கர்நாடக அரசு யோசித்து வருகிறது.
முதல்வர் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவர் ஆவார். இவர் நடிப்பில் பல படங்களில் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இவர் முதல்வர் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள தஸ்வி படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகிறது.
சினிமா ஆகிறது, அப்துல் கலாம் வரலாறு: அடுத்த வாரம் ஃபர்ஸ்ட் லுக்
இந்தப் படத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற போராடும் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்.
நிம்ரத் கெளர், யாமி கெளதம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
துஷார் ஜலோதா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.