ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இருக்கும் நிலையில் அவரை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா தனுஷ் புதிய கணக்கு தொடங்கியிருக்கிறார்.
சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதீத அக்கறை செலுத்தி தங்களது ரசிகர்களை கவர அதில் கணக்குகளை தொடங்கி வருகின்றனர்.
ஐஸ்வர்யா தனுஷ் இப்போது இன்ஸ்டாகிராமில்
இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை துவங்கியுள்ளார்.
உதவி இயக்குநர், கவிஞர், பாடகர், நடன கலைஞர் என பல திறமைகளை கொண்ட ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமுக்கு வந்ததற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
The wife gets on insta! Wish you some digital fun ????????https://t.co/dUvS48Ljmt
— Dhanush (@dhanushkraja) 24 February 2019
இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்று நடிகர் தனுஷ், “என் மனைவி இன்ஸ்டாகிராம் வந்துட்டாங்க.. இனி டிஜிட்டல் ஃபன் தான்” என ட்விட்டரில் பதிவிட்டு, ஐஸ்வர்யாவின் ஐடியையும் ஷேர் செய்துள்ளார்.