தங்களுக்குள் சண்டை இல்லை என்று நிரூபிக்க அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு!

இருவரும்  நடந்துக்  கொண்ட விதங்கள் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை பெரிதுப்படுத்தின. 

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக  இருக்கும் அபிஷேக் பச்சன் மற்றும்   ஐஸ்வர்யா ராய்   இருவரும் தங்களுக்கு எந்தவிதமான குடும்ப சண்டையும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்   முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்,  பாலிவுட் நடிகரும் , அபிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை  காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.  திருமணத்திற்கு முன்பு  இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து  இருவரும் காதலிப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன.

அதன் பின்பு  இவர்களின் திருமணம்  உறுதியாகி, மும்பையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணத்திற்கு பிறகு  இருவரும் இணைந்து நடிப்பதை    குறைத்து விட்டனர்.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான  ராவண்  திரைப்படத்தில்  ஒன்றாக நடித்திருந்தனர்.  அதன் பின்பு  இவர்கள் இருவரையும் திரையில் சேர்ந்து பார்பது அரிதாகியது.

அதே நேரத்தில்  சமீப காலமாக   அபிஷேக் – ஐஸ்வர்யா ராயுக்கு இடையில்   குடும்ப தகராறு இருப்பதாக பல தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இதை உறுதி செய்தும் விதமாக பொது இடங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இருவரும்  நடந்துக்  கொண்ட விதங்கள் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை பெரிதுப்படுத்தின.

இந்த சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருவரும் தற்போது புதிய முடிவை எடுத்துள்ளனர். 8 வருடங்களுக்கு பின்பு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றன. ’குலாப் ஜாமூன்’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, ”குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நானும், அபியும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இந்த பட வாய்ப்பு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போதே சேர்ந்து நடிக்கும் ஐடியா பிடித்திருந்தது. ஆனால் அபி குட்டி பிரேக் எடுக்க விரும்பினார். அதன் பிறகு அவர் மன்மர்சியான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். தற்போது தான் குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நேரம் கிடைத்துள்ளது”.  என்றூ கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close