ஐஸ்வர்யா ராயின் அருகில் இருப்பவர் யார்? வைரலாகும் பெண்மனியின் புகைப்படம்!!!

நடிகை ஐஸ்வர்யா ராய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

உலக அழகி பட்டம் வென்றதில் இருந்து, சமீபத்தில் நடந்த கேன்ஸ் 2018 படவிழா வரை ஐஸ்வர்யா ராய் என்ற பெயருக்கு எப்போதுமே மவுசு  அதிகம் தான்.  பச்சன் குடும்பத்திற்கு மருமகள் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் பாலிவுட்டில் அவருக்கான ரசிகர்கள் அதிகம் ஆனர்களே தவிர ஒருபோதும் குறைந்ததில்லை.

ஆனால், ஐஸ்வர்யா ராயை  பலரும் எழுப்பும் கேள்வி எதுவென்று பார்த்தால் அவர்கள் ஊடகங்க விமர்சனங்களை எதிர் கொள்ள தயங்குவார் என்பதே. காரணம்,  பிரபலங்கள் பலரும்  ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கிய பின்பு கூட, ஐஸ்வர்யா ராய் அந்த பக்கம் வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.

LOVE YOU UNCONDITIONALLY????????????✨Happiest Mama in the World ????

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

இந்நிலையில் தான் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்தைத்  தொடர்ந்தார். அதிலையும்  ஆரம்பமே பிரச்சனையில் முடிந்தது. காரணம்  கேன்ஸ் படவிழா தனது மகளுக்கு ஐஸ்வர்யா ராய் உதட்டில் முத்தம் கொடுப்பது போல் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டது தான்.

பொது மக்கள்,ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவரின் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.  சில மணி நேரத்திலியே அந்த புகைப்படம் வைரலானது.

 

பின்பு தான் தெரிய வந்தது அவர், தான் ஐஸ்வர்யா ராயின் அம்மா பிருந்தா ராய் என்று. ஆனால் இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை.   ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

இன்று அவரின் அம்மா பிருந்தாவிற்கு பிறந்தநாள் என்பதால் ஐஸ்வர்யா ராய் அந்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், இப்போது அவர் இருக்கும் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார்.

 

×Close
×Close