மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நாளை (மார்ச் 29) வெளியாக உள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்து வருகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 படங்கள் தயரானது. மணிரத்னம் இயக்கிய இந்த படங்களின் முதல் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து பாக்ஸ்ஆபீஸ் வசூலிலும் சாதனை படைத்து. மேலும் படத்தின் 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (மார்ச் 29) சென்னையில் பிரம்மாண்டாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ள நிலையில், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஊமை ராணி, நந்தினி என இரட்டை வேடங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர், ஐஸ்வர்யா ராணியைக் காண நாளை வரை காத்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இந்த பதிவுக்கு பலரும் இதயம் கலந்த எமோஜிகளை நிரப்பி வருகின்றனர். மற்றொருவர் வெறுமனே காத்திருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் தவிர, பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil