Advertisment

எனது கருத்துக்கு வெட்கப்படுகிறேன்... : ஐஸ்வர்யா ராய் குறித்த பேசிய அப்துல் ரசாக் மன்னிப்பு

ஐஸ்வர்யா ராய் பற்றி அப்துல் ரசாக் கூறிய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், ரசாக்கின் பேச்சை கேட்டு சிரித்த ஷாகித் அப்ரிடி மற்றும் உமர் குல் ஆகியோரையும் சாடினார்

author-image
WebDesk
New Update
Aishwarya Rai Abdul razak

ஐஸ்வர்யா ராய் பற்றி அப்துல் ரசாக் கூறிய கருத்து இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் படிக்க : After disrespecting Aishwarya Rai publicly, Pakistan cricketer Abdul Razzaq says he is ‘ashamed’ of his comments: ‘I apologise’

Advertisment

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையாக கருத்து கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். 

இந்தியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதோடு மட்டுமல்லாமல் தனது 3-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அடுத்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (நியூசிலாந்து, வங்கதேசம் தவிர)தோல்வியையே சந்தித்து.

இந்தியாவில் உலககோப்பை தொடர் தொடங்கும் முன்பு கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு லீக் சுற்றில் வெளியேறியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின நிலை குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்,  முன்னாள் கிரிக்கெட் வீரர்களான உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோருடன் இணைந்து பேசினார்.

அப்போது, உண்மையில் பாகிஸ்தான் அணியை மெருகூட்டி வெற்றிப்பாதைக்கு திருப்ப அழைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எண்ணம் இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தைகைய எதிர்பார்க்க விரும்பினால் அது ஒருபோதும் நடக்காது. உங்களின் எண்ணம் அப்படித்தான் இருக்கிறது என்று அப்துல் ரசாக் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய சர்ச்சை கருத்து இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே ஐஸ்வர்யா ராய் குறித்து தான் பேசிய கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள அப்துல் ரசாக், தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. "நான் மிகவும் வெட்கப்படுகிறேன், நான் மிகவும் மோசமான வார்த்தைகளைச் சொன்னேன் என்பதை உணர்ந்தேன். இதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து என்னை மன்னியுங்கள், ” நான் வேறு மாதிரியைப் பயன்படுத்த விரும்பினேன். ஆனால் நாக்கு சறுக்கல் காரணமாக ஐஸ்வர்யா ராயின் பெயரை எடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாவைப் பற்றிய ரசாக்கின் கருத்துகளின் கிளிப் ஆன்லைனில் வைரலாக பரவி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில்,, அஃப்ரிடி தொலைக்காட்சி செய்திகளில் தோன்றி ரசாக்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். ரசாக்கின் வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதைக் காட்டினாலும், என்ன சொன்னார் என்பது தனக்குத் தெரியாது. "இது ஒரு தவறான நகைச்சுவை மற்றும் இதுபோன்ற நகைச்சுவைகளை செய்யக்கூடாது," என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

அதேபோல், தனது தோழரின் கருத்துக்களை கடுமையாக கண்டனம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் "அவர் கூறியதற்கு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார். ஷோயப் அக்தர், ‘எந்த பெண்ணையும் இப்படி அவமரியாதை செய்யக்கூடாதுஎன்று ட்வீட் செய்ததோடு, ரசாக்கை உற்சாகப்படுத்திய குல் மற்றும் அப்ரிடியையும் கடுமையாக விமர்சித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment