‘பழிவாங்கும் முகம் அழகு’ பொன்னியின் செல்வன் படத்தில் பழுவூர் ராணி ஐஸ்வர்யா ராய் போஸ்டர் - Aishwarya Rai is the face of vengeance in Ponniyin Selvan 1 posters | Indian Express Tamil

‘பழிவாங்கும் முகம் அழகு’ பொன்னியின் செல்வன் படத்தில் பழுவூர் ராணி ஐஸ்வர்யா ராய் போஸ்டர்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு “பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்!” என்று ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை ட்வீட் செய்துள்ளது.

Aishwarya Rai Bachchan, Ponniyin Selvan 1, Ponniyin Selvan 1 posters, Ponniyin Selvan update, ஐஸ்வர்யா ராய் பச்சன், பழுவூர் ராணி, நந்தினி, பழிவாங்கும் முகம் அழகு, மணிரத்னம், பொன்னியின் செல்வன், விக்ரம், கார்த்தி, vikram, karthi, Vikram, Karthi, Jayaram Ravi, Trisha, Asihwariya Lekshmi, Sobhita

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படக்குழு, “பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்!” என்று ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை ட்வீட் செய்துள்ளது.

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், பிரம்மாண்டமாக தயாராகி வரும் வரலாற்று காவியப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை 2 பாகங்களாக மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல், பிறகாலச் சோழப் பேரரசின் அரசன் முதலாம் ராஜராஜ சோழனாக மாறிய அருள்மொழிவர்மனின் கதையை விவரிக்கிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை படக்குழு “பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்தியுங்கள்!” என்று ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை ட்வீட் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பழுவூர் ராணி நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போஸ்டரில், ஐஸ்வர்யா ராய் மிகவும் இரக்கமுள்ள ராணி போல் தெரிகிறது. ஆனால், இந்த தோற்றம் பார்வையாளர்களை ஏமாற்றலாம். ஏனென்றால், சோழப் பேரரசின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முக்கிய எதிரியாக நந்தினி இருப்பதாக கூறப்படுகிறது.

மணிரத்னத்தின் லட்சியப் படமான பொன்னியின் செல்வன் அளவு, நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பிரம்மாண்டமானது. இது அவரது முதல் காவிய கால திரைப்படம். இந்த படம் சோழப் பேரரசின் கற்பனையான கதையாகும். இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயராம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, சரத் குமார், பார்த்திபன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நான்காவது படமாக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். மணிரத்னத்தின் பீரியட் படமான இருவர் (1997) படத்தில் நடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய் இயக்குநர் மணிரத்னத்தின் குரு, ராவணன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, துணிச்சலான சாகசக்காரர்… இதோ வந்தியத்தேவன்! என்று கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்! என்று விக்ரமின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தின் புரமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக அவர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியின் கதாபாத்திரங்களின் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya rai is the face of vengeance in ponniyin selvan 1 posters