முன்னாள் உலக அழகியும், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகளுக்கு முத்தம் கொடுப்பது போல் வெளியிட்டுள்ள புகைப்படம் பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆங்கிலத்திலும் சில படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், அடுத்து பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்காக காத்திருக்கிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பிறந்த நாளான இன்று, அவருக்கு உதட்டோடு உதடு வைத்து ஐஸ்வர்யா ராய் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், என்னதான் மகள் என்றாலும் இப்படியா முத்தம் கொடுப்பது என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
என்னுடைய அன்பு, என் வாழ்க்கை, ஐ லவ் யூ ஆராத்யா என்று ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு, தாய் மற்றும் மகள்களின் உறவை மதிப்பிடுவதை நிறுத்துங்கள்…. இது அன்பு மற்றும் பாசத்தை குறிக்கும் முத்தம் மட்டுமே…. உங்களின் முட்டாள்தனமான கருத்துக்களை நிறுத்துங்கள்… நேர்மறையாக சிந்தித்து அன்பை பரப்புங்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், புண்படுத்தவோ அல்லது வெறுப்பை பரப்பவோ அல்ல, ஆனால் உண்மையில் பெற்றோர்கள் குழந்தைகளின் உதடுகளில் முத்தமிடுவதை நிறுத்த வேண்டும். இந்த நாட்களில் இது கொஞ்சம் கொஞ்சமாக ட்ரெண்டாகி வருகிறது, சிலருக்கு இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. தாய்வழி அன்பைக் காட்ட, உங்கள் குழந்தை தனது தோள்களில் கைகளைப் போர்த்திக்கொண்டு நிற்கும் புகைப்படம் கூட போதும், நீங்கள் கன்னங்கள் அல்லது நெற்றியில் முத்தமிடலாம். பலர் எதிர்மறையான கருத்துகளை பரப்புகிறார்கள். ஏனெனில் லிப்லாக் பெரும்பாலும் வயது வந்தவர்களின் வாழ்க்கை மற்றும் அனைத்தையும் நேசிக்கும் சூழலுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil