பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ராய்!

Ponniyin Selvan: இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Aishwarya Rai confirms mani ratnam's ponniyin selvan
ஐஸ்வர்யா ராய்

Mani Ratnam’s Ponniyin Selvan: இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய ’இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் மணி ரத்னம் வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக தீவிரமாகவே பேசப்பட்டு வருகிறது. இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத் தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த நடிகருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மணி ரத்னமும் கூட இப்படத்தை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு நடிகையாக எனது வாழ்நாள் முழுவதும் எந்த நேரத்திலும் மணி ரத்னத்துடன் பணியாற்றுவது நான் அவருக்கு தன் மரியாதை மற்றும் எனக்குக் கிடைத்த பாக்கியம். பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aishwarya rai mani ratnam ponniyin selvan

Next Story
A.R.Rahman as Playback Singer: ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்தப் பாடல்களை இத்தனை வித உணர்வோடு கேட்டுருக்கிறீர்களா?A.R.Rahman Climate Change Anthem
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express