Advertisment

வில்லியாக கோலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி

மணிரத்னத்தின் சமீபத்திய படங்களில் ஐஸ்வர்யா ராய் இல்லாததால் சோகமடைந்திருந்த மணிரத்னம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்

author-image
WebDesk
May 17, 2019 13:12 IST
aishwarya rai

முன்னாள் உலக அழகி மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், கோலிவுட்டில் வில்லி கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Advertisment

1997ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இருவர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துவந்தார், பிற இயக்குவர்களின் படங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டில் வந்த ராவணன் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்ப உள்ளார்.

மணிரத்னத்தின்ங கனவுப்படமான பொன்னியின் செல்வன் படம் விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், விக்ரம், கார்த்தி, மோகன் பாபு, அமலா பால், சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். சிறிய ரோல் தான் என்றாலும் மிக முக்கியமான ரோல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய், இந்த படத்தின் நந்தினி எனும் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மணிரத்னத்தின் சமீபத்திய படங்களில் ஐஸ்வர்யா ராய் இல்லாததால் சோகமடைந்திருந்த மணிரத்னம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

#Maniratnam #Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment