பழைய பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் ஏன் படங்களில் நிர்வாண காட்களில் நடிக்கவில்லை என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஜானர்லிஸ்ட் அந்த வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறிய வீடியோ கட்சி தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் முக்கிய அடையாளமாக திகழும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராய்க்கு முக்கிய பங்கு உண்டு. ஹிந்தி மட்டுமல்லாது பல மொழிகளில் வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2009-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி பிங்க் பாந்தர் 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா, அங்கே ஒரு நேர்காணலில் பங்கேற்றார். இந்த நேர்காணலில், ஐஸ்வர்யாவை பேட்டி எடுத்த அந்த நிரூபர் நீங்கள் ஏன் படங்களில் நிர்வாண காட்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை கேட்டு சிரித்தபடி பதில் அளித்துள்ள ஐஸ்வர்யா ராய் “நான் என் பெண்ணிடம் பேசுவதாக உணர்கிறேன். அதாவது, நான் யாரிடம் பேசுகிறேன்? என்பதை உணருங்கள் நீங்கள் ஒரு பத்திரிகையாளர், சகோதரரே, அந்த வேலையை மட்டும் கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார். .
இது தொடர்பாக வீடியோ ரெட்டிட் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதை பார்த்த ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் அவரது அணுகுமுறையைப் பாராட்டினர். “பாலிவுட் என்றால் என்ன என்று தெரியாமல், மோசமான நேர்காணல் செய்பவரையும் கேமரா மேனையும் தெருவில் இருந்து இழுத்துச் வந்தது போல் இருக்கிறது” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு ரசிகர் “ஆமாம், அவர் ஏன் பேட்டி கொடுப்பதை பாதியில் நிறுத்தினார் என்பதை என்னால் உணர முடிகிறது என்றும், இது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்கும்போது அவர் ஒரு கோபமடைவார். இதை பார்க்கும்போது டேவிட் லெட்டர்மேன் மற்றும் ஓப்ரா நேர்காணல்கள் நினைவுக்கு வருகின்றன” என்றும் ரசிகர்கள கூறியுள்ளனர்.
டேவிட் லெட்டர்மேன் ஒருமுறை, இந்தியர்கள் பெரியவர்கள் ஆனாலும் தங்கள் பெற்றோருடன் வாழ்வது பொதுவானதா என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “உங்கள் பெற்றோருடன் வாழ்வது நல்லது, ஏனென்றால் இரவு உணவிற்கு நாங்கள் எங்கள் பெற்றோரிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை இது இந்தியாவில் பொதுவானது,” என்று பதிலடி கொடுத்தார்.
பிங்க்வில்லா அறிக்கையின்படி, சில காட்சிகளை செய்வதில் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியமே ட்ராய் நிறுவனத்தை விட்டு வெளியேறியதற்குக் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் அவர் ப்ரைஸீஸாக நடிக்கவிருந்த நிலையில், அவர் விலகியதால, அந்த வாய்ப்பு ரோஸ் பைரனுக்கு சென்றது.
ஆனாலும் ஐஸ்வர்யா படத்திற்கு தேவையான நீண்ட அர்ப்பணிப்பு குறித்து இரு மனதில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக, கூறினார். “டிராய் பற்றி பேசும்போது, ஸ்கிரிப்ட் மட்டத்தில் இல்லை என்றாலும், இது ஒரு பெரிய படம் என்பதால், அவர்கள் குறைந்தபட்சம் 6-9 மாதங்கள் (அட்டவணையை) கால்ஷீட் என்று சொன்னார்கள். ஆனால் நான் இங்கு படங்கள் இருந்தபோது அங்கு அழைத்ததால் செல்ல முடியவில்லை. என்று ஐஸ்வர்யா இந்தியன் எக்பிரஸின் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“