scorecardresearch

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ரிலயாலிட்டி நிகழ்வு மூலம்தான் ஐவர்யா ராஜேஷ் அறிமுகமானார். காக்கா முட்டை படம் மூலம் தமிழக திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து அட்டக்கத்தி போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். பிறகு தனித்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான டிரைவர் ஜெமுனா  திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மலையாள ரிமேக்கான தி கிரேட் இந்தியான் கிச்சன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது முக்கியமான விஷயங்களை அவர் பேசியுள்ளார். ” ஆணாதிக்கம் நகரத்திலும், கிராமங்களிலும் இருக்கிறது. பெண்களின் வாழ்க்கை சமையலறையோடு முடியக்கூடாது. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை. கடவுள் ஆண், பெண் என்ற வித்தியாசத்தை பார்பதில்லை. கோவிலுக்கு இவர்கள்தான் வர வேண்டும் என்றும் இவர்கள் வரக்கூடாது என்று கடவுள் சொல்லவில்லை. மேலும் எந்த கடவுளும் குறிப்பட உணவைதான் சாப்பிட வேண்டும் என்றும் சாப்பிடகூடாது என்றும் கூறவில்லை. எல்லவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கி உள்ளனர். இதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை” என்று கூறியுள்ளார் . 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya rajesh great indian kitchen