scorecardresearch

முட்டை தோசைக்கு பிறகு ‘டல்கோனா காஃபி’: கிச்சன் கில்லாடி ஐஸ்வர்யா ராஜேஷ்!

Dalgona Coffee: பிரபலங்கள் தங்களின் நேரத்தை, சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என பிடித்த செயல்களை செய்து செலவழிக்கிறார்கள்.

Aishwarya Rajesh Dalgona Coffee
Aishwarya Rajesh Dalgona Coffee

Aishwarya Rajesh : கொரோனா வைரஸின் பரவுவதைக் கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தை, சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என பிடித்த செயல்களை செய்து செலவழிக்கிறார்கள்.

அந்த வகையில், தனது படக்குழுவினருக்காக முட்டை தோசை சுட்டுக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டல்கோனா காஃபியை தயார் செய்திருக்கிறார். ஒன்றரை ஸ்பூன் ப்ரூ காபி பவுடர், மூன்று ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் க்ரீம் போல நன்றாக அடித்து,  குளிர்ந்த பாலில் சேர்த்து, இறுதியாக இலவங்கப்பட்டைப் பொடியைத் தூவினார் ஐஸ்வர்யா. பின்னர் குடித்துப் பார்த்து செமையா இருக்கு, என்றவாறு, மற்றவர்களையும் டல்கோனா காஃபி தயாரிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

ஐஸ்வர்யா குடும்பத்தினருடன் வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் மருமகனுடன் (அண்ணன் மகன்) விளையாடும் வீடியோவை வெளியிட்டார். இந்த கடினமான நேரங்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்து மகிழ்கிறார்கள் நடிகைகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya rajesh making dalgona coffee video