Aishwarya Rajesh : தமிழில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ’அட்டக்கத்தி’, ‘காக்கா முட்டை’, ‘கனா’ என தனது திரை வாழ்க்கையில் நினைவுக்கூறும் படியான பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக விக்ரம் பிரபு, ஷாந்தனு பாக்யராஜ் ஆகியோருடன் இணைந்து “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்தார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
ரஜினி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை; விவரங்களை வெளியில் சொல்லத் தடை
View this post on Instagram
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா, கேத்ரின் தெரெஸா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
‘டெஸ்டுல பாஸ் ஆனா தான் ஃபர்ஸ்ட் நைட்டு’: மாயன் பாஸா, ஃபெயிலா?
தற்போது ’கா/பெ.ரணசிங்கம்’, ’துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓய்வு நேரத்தில் படபிடிப்பு தளத்தில் முட்டை தோசை சுட்டு, பணியாளர்களுக்குக் கொடுக்கிறார் ஐஸ்வர்யா. இயற்கை எழில் கொஞ்சும் மலை சார்ந்த பகுதியாக இருக்கிறது அந்த இடம். தற்போது அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”