Advertisment

ரெட் ஜெயன்ட் செண்பக மூர்த்தி வேகம்... வியந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஓட்டப்பயத்தில் பயங்கர வேகத்தில் ஓடிய ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி; வியந்து பாராட்டினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

author-image
WebDesk
Sep 27, 2023 23:40 IST
New Update
aishwarya rajesh and shenbagamoorty

ஓட்டப்பயத்தில் பயங்கர வேகத்தில் ஓடிய ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி; வியந்து பாராட்டினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

உங்ககிட்ட போட்டி போட்டா கண்டிப்பா நான் தோற்றுவிடுவேன் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தியின் வேகத்தை புகழ்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியுள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு சிறப்பாக ஓடினார். இதனை அந்த விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டி பேசினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், செண்பக மூர்த்தி சார், என்ன இப்படி பயங்கரமா ஓடுறீங்க. நீங்க ஓடுறதை பார்க்கிறப்பா, நம்மால் இப்படி ஓட முடியாதுனு தோணுது. நீங்க உங்க வயசை விட இளமையானர் ஓடும் வேகத்தில் ஓடுறீங்க. 20 வயது சின்னவர் மாதிரி இருக்கு, உங்க ஓட்டம். முடிந்தால் அடுத்த ஆண்டு நானும் உங்க கூட ஓட ட்ரை பண்றேன். கண்டிப்பா நான் தோத்துடுவேன்னு நினைக்குறேன்.

13.6 வினாடிகளில் ஓடியிருக்கார் என்பது மிகப்பெரிய விஷயம். அனைவரும் விளையாட்டுகளில் கலந்துக் கொள்வது நல்லது. என்னுடைய பயிற்சியாளர்கள் விளையாட்டுகளில் ஈடுபட என்னை எப்போது ஊக்கப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் யோகா, ஓட்டம், சைக்கிளிங் போன்ற ஏதாவது ஒரு விஷயத்தை செய்வது நல்லது.

நானும் விளையாட்டு வீராங்கனை தான். ஓட்டம், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். நீச்சல் மாநில அளவிலான வீராங்கனை நான். சினிமாவுக்கு வந்ததால் விளையாட்டில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Aishwarya Rajesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment